மந்திரம் கால் மதி முக்கால்
சிலர் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைய முடியாமல் தவிப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு தொழிலை தொடங்கி அதை பாதியிலே விட்டு விடுவது. பல நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் வேலை கிடைக்காமல் இருப்பது. இது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆன்மிக ரீதியாக சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதை முறையாக செய்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். வாருங்கள் அதற்கான வழிமுறையை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஒரு நெய் விளக்கு ஏற்றிவிட்டு அதன் பிறகு ஒரு விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு அருகம்புல் சாற்றி அலங்கரித்துவிட்டு ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும்.
அதன் பிறகு முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும். பிறகு கீழே உள்ள மந்திரத்தை கூற வேண்டும்
காரிய சித்தி மந்திரம்
ஓம் சிவாய நம ஓம்
ஓம் சர்வ சக்தி ஓம்
ஓம் ஓங்கார சக்தி ஓம்
ஓம் பிரணவப் பொருளே ஓம்
ஓம் பஞ்சாட்சரமே ஓம்
ஓம் பிரபஞ்ச சக்தியே ஓம்
ஓம் சர்வகாரிய சித்தி சக்தியே ஓம்
ஓம் சவர் ஜெயசக்தியே ஓம்
ஓம் மசி நசி அங் மங் சங்
ஆதார சக்தியே ஓம்
இந்த மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் தினம் 108 முறை கூற வேண்டும். அதன் பிறகு தினமும் ஒரு முறை இந்த மந்திரத்தை கூறிவிட்டு விபூதி பரப்பி தகட்டில் கற்பூரம் ஏற்றி வணங்கிவிட்டு அந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு எந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி நிச்சயம்.
Comments
Post a Comment