குபேர முத்திரை!
குபேர முத்திரை! கு பேரன் செல்வத்தின் அதிபதி. அவருடைய திசை வடக்கு. நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன் குடியிருக்கும் இடம் சிரசு. குபேர முத்திரையின் மூலம் சிரசின் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த முத்திரையின் மூலம் நமது வேண்டுதல்களை இறைவனிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதாகவே கொள்ளலாம். எப்படிச் செய்வது?: இந்த முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு. சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி மற்றும் கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும். ...